மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      தளபதி 63 திரைப்படத்தின் கதை இதுதான்!!!

  தளபதி 63 திரைப்படத்தின் கதை இதுதான்!!!

   
தளபதி 63 திரைப்படத்தின் கதை இதுதான்!!!

இயக்குனர் அட்லீ (Atlee) இயக்கத்தில் நடிகர் விஜய்யின் (Vijay) நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்தான் தளபதி 63, ரசிகர்கள் பலரால் கொண்டாடப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் கதை பற்றிய latest தகவல்கள். 


திரைப்படம் திரைக்கு வரும் முன் அதன் கதையை தெரிந்துக்கொள்ள பலரும் விரும்புவர், ஆனால் சிலர் காத்திருந்து கதையின் முழுசுவாரசியத்தையும் ருசிப்பர். காத்திருப்போர் காத்திருக்கட்டும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளோர் தெரிந்துகொள்ளுங்கள். தளபதி 63 என்ற திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகலாம், இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பெரிய மைதானம் செட் ஒன்றில் நடந்து கொண்டு இருக்கிறது அத்திரைப்படத்தின்  கதை கால் பந்தாட்டதை மையப்படுத்தியே உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அதில் நடிகர் விஜய் ஒரு அணியின் பயிற்சியாளராக வருகிறார் இவரை அடுத்து 16 பெண் போட்டியாளர்கள் படத்தில் நடிக்கின்றனர் மற்றும் ஃப்ளாஷ்பேக்-ல் அணியின் தலைவராக வரலாம், என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. இத்திரைப்படத்தின் பெயரை இன்னும் குழுவினர்கள் முடிவுசெய்யவில்லை என்றாலும் படத்தின் பெயர் இவற்றுள் ஒன்றாக இருக்கலாம் வெறித்தனம், மைக்கேல் மற்றும் CM (Captain Michael). இப்படத்தின் இறுதிக்கட்டம் மைதானத்தில் நடைபெறும் என்பது தற்போது வெளிவந்த புகைப்படத்தில் உறுதியாகியுள்ளது. அப்புகைப்படத்தின் மூலம் கதையின் climax சித்தரிக்கப்பட்டது.

நடிகர் விஜய்யின் தளபதி 63 திரைக்கு வந்தால் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருக்கும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே கால்பந்தாட்டம் விளையாட்டை கொண்டு ஒரு பெரும்புரட்சி ஏற்படும் என்று, இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு தந்தை வேடத்தில் வரும் பிரபல  நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தம்  அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறெல்லாம் செய்திகள், தகவல்கள் வெளிவந்துகொண்டு இருப்பதால் நடிகர் விஜய்யின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு விண்ணைத்தொட்டுள்ளது.

Related News