பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துவரும் நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனி மற்றும் படத்தில் நடித்த நடிகைக்கு காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விஜய் ஆண்டனி, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சுயநினைவை இழந்த நிலையில் உள்ள அவருக்கு முகத்தில் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.