விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

  லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

   
லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமூகக் கருத்துக்களை கொஞ்சம் காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக வெளியான கோமாளி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து இவர் இயக்கத்தில் உருவான 'லவ் டுடே' படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை 'ஏஜிஎஸ் ப்ரொடக்ஷன்' தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பிரதீப் நடித்திருந்தார்.

கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இதைவிட நான் என்ன கேட்க முடியும். சூரியனுக்கு அருகில் இருப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு, அந்தக் கண்கள் , சிரிப்பு , நடை மற்றும் அன்பு. ரஜினிகாந்த் சார் லவ் டுடே பார்த்து என்னை வாழ்த்தினர். நீங்க சொன்ன வார்த்தைகளை எப்போதும் மறக்கமாட்டேன் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Related News