விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு

  வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு

   
வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு

வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. இப்படத்தை தற்போது சுராஜ் இயக்க ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் 'அப்பத்தா' பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை வடிவேலு பாட, பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இப்பாடலில் வரும் 'கால் வைக்கும் இடமெல்லாமே கன்னி வெடி, கான்ட்ரவர்சியை தாண்டினேன் ப்ளான் பண்ணி' என வரும் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் 'சந்திரமுகி 2' படத்திலும் நடித்து வருகிறார்.

 

 

Related News