இயக்குனர் எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள துணிவு திரைப்படம், ஜனவரி 11 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இதே பொங்கல் பாண்டியை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படமும் வெளியாக உள்ளதால், இரு படத்திற்கும் படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் செய்து வருகிறார்கள்.
விஜய்யின் வாரிசு படத்தின் போஸ்டரை, மெட்ரோ ரயிலில் ஒட்டி, படக்குழுவினர் புரோமோட் செய்த நிலையில் ஒரு படி மேலே சென்று 'துணிவு பட குழுவினர், வானத்தில் விமானத்தில் இருந்து குதித்து, பாராஷூட் மூலம் ஸ்கை டைவிங் செய்து 'துணிவு' படத்தை புரோமோட் செய்துள்ளனர்,இது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.இது ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.