கன்னடத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் "முப்தி".இப்படத்தின் தமிழ் ரீமேக்கான "பத்து தல" படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.2019ல் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது .சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படத்தின் இயக்குனரை மாற்றினார்கள்.
சிம்புவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி கடந்த மாதம் மீண்டும் பட பிடிப்பை தொடங்கினர்.படத்தை முடிக்க திட்டமிட்ட நிலையில் சிம்புவின் அப்பா டீ.ராஜேந்தரின் உடல் நல குறைவால், சிம்புவால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயலவில்லை.தற்பொழுது டீ.ராஜேந்தர் உடல் நலமுடன் இருக்கிறார்.இதனால் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் கர்நாடகாவில் தொடங்க உள்ளது.