பத்து தல படத்தின் அப்டேட்டை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். தந்தையின் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த நிலையில், சிம்பு வெளியிட்டிருககும் அப்டேட், அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுன் காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிம்பு தனது உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக உருவெடுத்தார். மாநாடு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கம்பேக் கொடுத்த சிம்பு, தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ம்தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து பத்து தல படத்தை விறுவிறுவென முடிக்கும் திட்டத்தில் உள்ளார் சிம்பு.