விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். பிறகு ZEE தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்தவர்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 மூலம் மிகவும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான ஷிவானி. தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை பட வாய்ப்புக்காக பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். சில நேரங்களில் தனது டான்ஸ் விடீயோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
சமீப காலமாக பிரபலங்கள் பலரும் மாலத்தீவு சென்ற போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஷிவானியும், மாலத்தீவில் பீச் ரிசார்ட் ஒன்றில் பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு ஷிவானியின் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.