வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் வாத்தி.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் இது.
இந்தப் படத்தில் தனுஷ் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் வாத்தியாராக நடித்துள்ளார்,இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்,மேலும், சமுத்திரக்கனி, தனிகெல்லா பரணி, சாய்குமார், தோட்டாபல்லி மது, ஹைபர் ஆதி, ஆடுகளம் நரேன், இளவரசு, ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, ப்ரவீனா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.
வாத்தி படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் நாடோடி மன்னன் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.