தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளில் சாய்பல்லவியும் ஒருவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தம் பாதம் பதித்து வருகிறார். அணைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
தற்போது விராட பர்வம் என்ற தெலுங்கு படத்தில் ராணாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கார்க்கி என்னும் படத்தில் நடிக்கவிருக்கிறார். விராட பர்வம் படத்தின் ப்ரோமோஷனில் இவருக்கு லேடி பவர் ஸ்டார் என்று பெயர் ஒழிக்கப்பட்டது. சாய்பல்லவி கூறுகையில் 'வன்முறை என்றாலே எனக்கு பிடிக்காது, முடிந்தவரை யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை காட்டியது. அந்த படத்தை மத மோதல்களாக பார்க்கிறோம். ஆனால் சமீபத்தில் மாடுகளை கொன்று லாரியில் ஏற்றி சென்றவர், அந்த லாரி டிரைவர் முஸ்லீம் என்பதால் அவரை கொன்று ஜெய் ஸ்ரீராம் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத வெறிதான். மதங்களை தாண்டி மனிதர்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சாய்பல்லவி கூறிய இந்த கருத்து வைரலாகி வருகிறது.