சினிமா துறையில் உள்ளவர்கள் என்றாலே பணக்காரர்களாக இருப்பார்கள், என்று தான் நாம் அனைவரும் எண்ணுகிறோம். ஆனால் படவாய்ப்புகள் இருந்தால் மட்டுமே அவர்கள் பணக்காரர்கள். இல்லையென்றால் பணம் இருக்கும்போதே சொந்தமாக பிசினெஸ் வைத்திருக்கும் நபர்களால் மட்டுமே இந்த சமுதாயத்தில் வாழ முடியும்.
இவை இரண்டையும் தவறவிட்டார் நடிகை சாந்தா மீனா என்கிற ஐஸ்வர்யா. இவர் பிரபல நடிகை லட்சுமியின் மகள் என்பது அனைவர்க்கும் தெரியும். 18 வயதிலேயே சினிமா துறைக்கு வந்த ஐஸ்வர்யா. எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் இவர். இருந்தாலும் அம்மா அளவுக்கு இவர் பிரபலமாகவில்லை. தற்போது எந்த வேலையும் இல்லாமல், படவாய்ப்பும் இல்லாமல் வீடு வீடாக சென்று சோப்பு விற்கிறார். ஐஸ்வர்யா கூறுகையில் "நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன் , ஒரு வேலைதான் என்னால் சாப்பிட முடிகிறது. இந்த நிலை மாறவேண்டும் என்றால் , எனக்கு வேலைவேண்டும். வேலைகிடைத்தல் சோப்பு விற்பதை விட்டுவிடுவேன். நல்ல சம்பளம் என்றால் கழிவறை கழுவ கூட நான் ரெடி, அதுவும் நல்ல வேலைதான்" என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.