தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்,அனிருத் இசையமைக்கிறார், சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் வில்லனாக நடிக்க கன்னட நடிகர் சிவராஜ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஐஸ்வர்யா ராய்,பிரியங்கா மோகன்,ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள். ஹைதெராபாத் ராமோஜிராவ் பிலிம் சிடியில் செட் அமைத்து பெரும்பாலான காட்சிகள் படம் ஆக்கப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 10 அன்று படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படுகிறது.