மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      பாவம் ரஜினியின் தர்பார்!

  பாவம் ரஜினியின் தர்பார்!

   
பாவம் ரஜினியின் தர்பார்!

ஜனவரி 9-ஆம் தேதி வெளியான ரஜினின் தர்பார் திரைப்படம் உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது, இந்நிலையில் திரைக்கு வந்த இப்படத்தின் கருத்தை கேட்டால் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். அப்படி என்ன ஆனது இத்திரைப்படத்திற்கு என்று பார்த்தால். தலைவர் ரஜினி காந்த் அவர்கள் நிவேதாவின் தந்தையாக வருவதோடு காவல் துறை அதிகாரியாக களம் இறங்குகியுள்ளார்.

எப்போதும் போல தலைவருக்கென்று பல மாஸ்  சீன்கள் உள்ளது அதில் நாம் ஏ.ஆர் முருகதாஸை குறை கூற முடியாது. ரஜினி கதாபாத்திரம் அருமையாக இருந்தாலும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. கோவையில் நேற்று எந்த திரையரங்கம் சென்றாலும் தர்பார் மட்டுமே காணமுடியும் என்ற நிலை இருந்தது ஆனால் திரைப்படம் காண திரையரங்கம் உள்ளே சென்ற ரசிகர்கள் உறங்கி கொண்டிருப்பது வியப்பை தந்தது.

 

 

திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் தர்பார் எப்படி என்று கேட்டதற்கு கெட்ட வார்த்தை மட்டும் தான் பேசவில்லை மற்றபடி சகலமும் கூறிவிட்டு சென்றார் அந்த சகோதிரர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பு இத்திரைப்படத்தில் ஒரு துளி அளவு கூட இல்லை என்றும் புலம்பி சென்றனர் பலர். மக்கள் மகிழ்ந்த இரு கதாபாத்திரம் யார்? என்று பார்த்தால் அது யோகி பாபு மற்றொன்று நிவேதா.

 

 

Related News