மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      வெளிவந்த முத்த காட்சி ரகசியம்!

  வெளிவந்த முத்த காட்சி ரகசியம்!

   
வெளிவந்த முத்த காட்சி ரகசியம்!

தமிழ் திரைப்படங்களுக்கு கடவுளாக காட்சி அளிப்பது சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரே, இந்த தரவரிசையில் கமல் மற்றும் ரஜினி அவர்களையும் இணைக்கலாம் என்றும் கூறலாம். கமல் ஹாசனின் நடிப்பிற்கு உலக நாயகன் என்ற பட்டம் கிடைத்தது. 1980-1990-ல் உள்ள சினிமா ரசிகர்கள் கமலை தெய்வமாகவே பார்த்தனர். அவ்வாரிருக்கையில் நடிகைகள் விஷயத்தில் பல சர்ச்சை கமலின் மேல் இன்னும் இருக்கதான் செய்கிறது. கமல் நடிப்பில், பாலசந்தர் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் 1986-ல் வெளிவந்த "புன்னகை மன்னன்" திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் விருந்தாக இருந்தது மேலும் உலகமெங்கும் பேசப்பட்ட ஒரு திரைப்படமும் கூட.

அந்த திரைப்படத்தின் கதாநாயகியான ரேகா சமீபத்தில் அத்திரைப்படத்தின் முத்த காட்சியை பற்றி கூறிய தகவல் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கமல்  ஹாசன் மற்றும் பாலசந்தர் முத்தக்காட்சி படப்பிடிப்பின் போது ரேகாவிடம் சொல்லவில்லையாம். சொல்லாமல் லிப் லாக் செய்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது என்று ரேகா கூறியிருந்தார். இந்த விவகாரத்தை பல நிகழ்ச்சியில் நான் கூறியிருக்கிறேன் என்றும் கூறினார். தமிழ் திரைப்படங்களில் வந்த முதல் லிப் லாக் இதுவே, இப்படம் வெளிவந்த கால கட்டத்தில் மிகவும் பேசப்பட்ட ஒரு விஷயம் இந்த லிப் லாக். இதை இப்போதும் பல ரசிகர்கள் கமல் மற்றும் பாலசந்தர் செய்தது தவறு என்ற கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Related News