பொன்னியின் செல்வன் படத்திலிருந்து முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழுவினர் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இதுதொடர்பாக படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று படம் என்பதாலும், இசை ஏ.ஆர். ரகுமான் என்பதாலும் பாடல்கள் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. டீசரின்போது வெளியான பின்னணி இசை மிகவும் சிறப்பாக உள்ளதென ஃபேன்ஸ் கமென்ட் செய்துள்ளனர். இந்த படத்திற்காக பழங்கால இசைக்கருவிகளை ஆய்வு செய்து அதனை ஏ.ஆர். ரகுமான் படத்தில் பயன்படுத்தியதாக தகவல்கள் கூறப்படுகிறது.