தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தரர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் கேரளா சென்றுள்ளனர். மேலும் திருப்பதி சென்று திருமலை தரிசித்துவந்தனர்.
திருமணத்திற்கும் வந்த அணைத்து பிரபலங்களும் வியக்கும் வகையில் அவரின் ஆடை வடிவமைப்பு மிக அழகாக இருந்தது. அந்த சிகப்பு புடவையில் அம்மன் சிலை மற்றும் இருவரின் பெயர்கள், திருமணத்தின் தேதி ஆகியவை எம்பிராய்ட் செய்யப்பட்டிருந்தது. இதனை நயன்தாராவின் ஆடை வடிவமைப்பாளர் அழகாக வடிவமைதுள்ளார். இந்த புடவையை வடிவமைக்க 13 பேர் கொண்ட குழு வேளையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த ஆடையை வடிவமைக்க ரூபாய்.25 லட்சம் செலவளித்துள்ளனர். அந்த ஆடையை நயன்தாராவிற்கு அவரது பியுடிசியன் கட்டிவிட்டு மேலும் அழகுபடுத்தும் வீடியோவை ஒரு மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.