பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவின் காதலி புகைப்படம் இன்று வைரலாகி வருகின்றது. முகேன் ராவ் இசை துறையில் மற்றும் நடிப்பில் கலக்கி வருவது போல் இவரின் காதலியும் நடிப்பில் மற்றும் தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்குகின்றாராம். இப்போது முகேன் ராவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவர ஜோடி பொருத்தம் மிக அருமையாக இருக்கின்றது. பிக்பாஸில் இருக்கும் போது தனக்கு நதியா என்ற காதலி இருப்பதாக கூறியிருந்தார். இருவரும் மலேசியாவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.