வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வெளியாகிறது.
விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்படும்.
இதனால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கான சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்த சூழலில் தமிழக அரசு அதிரடியான உத்தரவை வெளியிட்டுள்ளது.
நாளை ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மட்டுமே நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து அடுத்து பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு என 2 படங்களுக்குமே அதிகாலை காட்சிக்கு தடை விதித்துள்ளது.
அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படாததற்கு காரணம் ,அதிகாலை காட்சிகள் ஒளிபரப்பாகும் போது இருதரப்பு ரசிகர் கூட்டம் இடையே அதிக சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.
சண்டையைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் விடுமுறை நாட்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை.