இயக்குனர் பிரதீப் ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர், பிரதீப் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது.
இப்போதைய காலகட்டத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படையாக இந்த படம் காட்டு இருந்தது.இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வராதநிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தான் லவ் டுடே படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்தது.
இப்போதைய காலகட்டத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதையும், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் காதலை பற்றி ரசிகர்களுக்கு வெளிப்படையாக இந்த படம் காட்டி இருந்தது அதனால் அதிரிபுதிரி ஹிட்டு அடித்து வசூல் வேட்டையாடியது.
தனுஷின் யாரடி நீ மோஹினி படத்தில் தனுஷின் நண்பராக நடித்த கார்த்தி சமீபத்தில் நடந்த பேட்டியில் லவ் டுடே படத்தில் பெண்களை இழிவு படுத்தியவாரு காட்சிகள் அமைந்ததாக கூறி இருந்தார். இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில மொழிகளில் டப் செய்து வெளியான போது பல சர்ச்சைகள் எழுந்தது என குறிப்பிட்டு இருந்தார்.
காதலில் பெண்களை மட்டும் தவறான பிம்பம் காட்டுவது தப்பு. இன்னும் பத்து வருடங்கள் ஆனால் இந்த நிலைமை கண்டிப்பாக மாறும். அப்போது நாம இப்படி ஒரு படத்தை எடுத்தோம் என்று பிரதீப் வருத்தப்படுவார் என கார்த்திக் கூறி உள்ளார்.