மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      தயாரிப்பாளரால் நடிகை மனஉளைச்சல்!

  தயாரிப்பாளரால் நடிகை மனஉளைச்சல்!

   
தயாரிப்பாளரால் நடிகை மனஉளைச்சல்!

நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாக்குள் நுழைந்த நடிகை மெஹ்ரீன் பிர்ஸாடா, சமீபத்தில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் முன்னணி நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான தெலுங்கு திரைபடம் ‘அஷ்வதாமா’. அத்திரைப்படதின் தயாரிப்பாளர் ஷங்கர் பிரசாத் - மெஹ்ரீன் பிர்ஸாடா மேல் அதிக பணம் வாங்கிக்கொண்டார் என்ற குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுவாக திரைப்படம் ப்ரோமோஷன் முடிவடைந்தபின் தான் நடிகை, நடிகர் மற்றும் படக்குழுவினர்களுக்கு இறுதி தவணை பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் மெஹ்ரீன் பிர்ஸாடாவிற்கு முழு பணமும் முன்னரே கொடுக்கப்பட்டுவிட்டதாம். திரைபடத்தின் விளம்பர வேலை நடந்து கொண்டிருக்கும் போது நடிகை யாரிடமும் சொல்லாமலே ஹோட்டலை விட்டு வெளியேறிவிட்டாராம். இதனால் நடிகைக்கென்று ஒதுக்கிய ஒரு பெரும்பங்கு செலவாகிவிட்டது என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த மெஹ்ரீன் தனது தாத்தாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, சங்கராந்தி என்ற திரைப்படத்தின் விளம்பர பணிகள் முடிவடைந்து பஞ்சாப் திரும்பி குடும்பங்களை சந்தித்து பின் ஹைதராபாத்துக்கு திரும்பி வந்தேன் அஷ்வதாமா படத்துக்கான அனைத்து விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற பிறகு, எனக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டதால் என்னால் ஒரு பேட்டியில் பங்கேற்க இயலவில்லை.

அதற்கு என்ன நஷ்டம் ஏற்பட்டதோ அதை சரி செய்யுமாறு என்னுடைய மேனேஜரிடம் கூறினேன் உடனே அதை அவர் சரிசெய்துவிட்டார். மேலும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஆவணங்களையும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி பேட்டிக்கு வராமல் இருந்ததற்கு மன்னிப்பும் கோரியுள்ளேன். இவை அனைத்தும் செய்தும் என்மேல் அவதூறு கூறுவது எனக்கு தீராத மனஉளைச்சலை அளிக்கின்றது.

 

 

Related News