2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த வசனத்திற்கான விருது மற்றும் அறிமுக இயக்குநருக்கான விருதையும் மண்டேலா படம் பெற்றுள்ளது
ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மண்டேல. இந்தப் படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது ‘மண்டேலா’ படம். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் முதல் படத்திலேயே தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார் இயக்குநர் மடோன் அஸ்வின். மேலும், அரசியல் நையாண்டி படமான மண்டேலா இந்த வருட ஆஸ்கர் போட்டிக்கான 14 படங்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.