தமிழ் சினிமாவில் 90ஸ் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் தான் மாதவன். கல்லூரி ஆசிரியராக இருந்து பின் நடிகர் ஆனார். தற்போது டைரக்டர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல துறையில் கலக்கியவர். 2000தில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற படத்தில் நடித்தார். பின்னர் படிப்படியாக ஹிந்தி படங்களிலும் நடித்தார். மின்னலே, டும் டும் டும், அன்பே சிவம், ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டாய் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது மாதவன் நடிப்பில் ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படம் நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் உண்மை சம்பவம். இந்த படத்தின் எழுத்தாளர், டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் நடிகர் மாதவன். கல்லூரி மாணவனாக இருந்து இவர் எப்படி விஞ்ஞானி ஆகிறார் என்பதே இந்த படத்தின் கதைக்களம். இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலிஷ், ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. வழக்கம் போல் தமிழ் சினிமா என்றாலே சண்டை, பெண்கள் கற்பழிப்பு, கடத்தல், போதைப்பொருள் போன்ற சலிப்பான கதைகளில்ஒரு படமாய் இந்த படம் இருக்காமல் , அறிவை வளர்த்துக்கொள்ளும் முறையில் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.