இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் தான் லொஸ்லியா.
இவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை. வித வித வீடியோக்கள் எல்லாம் இவருக்காக வெளிவந்தது, அந்த அளவிற்கு ரசிக்கப்பட்டார்.
லொஸ்லியா முதல் முதலாக கமிட்டான படம் ப்ரண்ட் ஷிப். ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் லாஸ்லியாவும் அறிமுக கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.
இந்நிலையில், ப்ரண்ட் ஷிப் படத்தில் வரும் ஒரு பாட்டுக்கு லொஸ்லியா, ஹர்பஜன் சிங் இருவரும் இனைந்து நடனமாடும் புகைப்படங்கள் வெளியாகி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.