லொஸ்லியா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். லொஸ்லியாவிற்கு ரசிகர்கள் அவர்கள் அன்பை தெரிவிக்கும் விதத்தில் Common DP செய்து அதை ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் தான் லொஸ்லியா.
இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்காத ஆளே இல்லை. ரசிகர்கள் அவர்களின் அன்பை வெளிப்படுத்த வித விதமான விடீயோக்களை வெளியிட்டு தங்களின் அன்பு சங்கலியால் கட்டிப்போட்டனர்.
தற்போது லொஸ்லியாவின் Friendship பட ட்ரைலர் வெளி வந்த நிலையில், அதை சமூக வலைத்தளத்தில் கண்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதை தொடர்ந்து கூகிள்குட்டப்பனில் நடித்து வருகிறார் லொஸ்லியா.