இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் தான் லொஸ்லியா.
இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்காத ஆளே இல்லை. ரசிகர்கள் அவர்களின் அன்பை வெளிப்படுத்த வித விதமான விடீயோக்களை வெளியிட்டு தங்களின் அன்பு சங்கலியால் கட்டிப்போட்டனர்.
தற்போது லொஸ்லியாவின் Friendship பட ட்ரைலர் வெளி வந்த நிலையில், அதை சமூக வலைத்தளத்தில் கண்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே லொஸ்லியா அவரது இரண்டாவது படமான கூகிள்குட்டப்பன் எனும் படத்தில் கமிட் ஆகி உள்ளார். இதில் பிக் பாஸ் பிரபலமான தர்ஷனுடன் நடிப்பதாக உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகிவருகிறது.