விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரது மனதையும் கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.வித்தியாசமான கதைகளான மாநகரம் ,கைதி போன்ற படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்.தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி பெரும் வெற்றிக்கு வழிவகுத்தவர் லோகேஷ்.இதன் மூலம் தன்னால் கமற்சியல் திரைப்படத்தை இயக்க முடியும் என நிரூபித்தார்.விஜயுடன் தளபதி 67 யில் இணைய உள்ளார்.இவர் சல்மான் கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.ஆனால் ராம் சரணை இயக்க வேண்டும் என ஆசை தெரிவித்துள்ளார் லோகேஷ்.