தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதால் படக்குழு இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/cine-news/news/ கிளிக் செய்யவும்.