சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.குறைந்த செலவில் அனைத்து தரப்பு மக்களும் விமான சேவைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் விமானி ஜி.ஆர்.கோபிநாத் சொந்த விமான நிறுவனத்தை எடுத்துக் கொண்ட முயற்சியை கதைகளமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தது.
1.சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2.நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுகிறார்.
3.சிறந்த பின்னணி இசைக்கான விருதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெறவிருக்கிறார்.
4.சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பிரிவில் சூரரைப்போற்று திரைக்கதை எழுத்தாளர்கள் ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
5.அதோடு சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. இன்று சூர்யா தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.