Home     News      தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்!!

  தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்!!

   
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர். அவரின் நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளிவந்த "மகாநதி" திரைப்படம் தேசிய விருதுக்கு தகுதி அடைந்துள்ளது. மேலும், 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மகாநதி திரைப்படத்தின் மூலம், 2019-ஆம் ஆண்டின் சிறந்த நடிகை என்ற தரவரிசையில் வெற்றி பெற்றுள்ளார்.

Keerthy Suresh Images

இந்த விஷயம் தெரிந்தவுடன் கீர்த்தி சுரேஷ் தன் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நன்றிகளை வெளிப்படுத்தும் வகையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்து இவரின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

 

 

இப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் திரையுலகப் பயணத்தின் அடுத்த கட்டமாக பாலிவுட்டில் நடிக்கவுள்ளார் அதற்காக இவர் உடலிடையை குறைத்தும் உள்ளார்.

Related News