விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?

  மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?

   
மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் வரும் அக்டோபர் 10ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றி தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே ரம்யா பாண்டியன், சூர்யா தேவி, புகழ், கிரண் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக கடந்த சீசனில் கலந்துகொண்ட கவின் பட்டியலில் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 கவின் வருவதற்கு காரணம்

kavin

கடந்த சீசனில் ஓட்டு போடும் மக்களோ அல்லது பிக்பாஸ் நிர்வாகமோ கவினை வெளியேறவில்லை. அவராகவே தானாக முன்வந்து வெளியேறினார். நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையிலும், பிக்பாஸ் கொடுக்கும் பணத்திற்காகவும் கவின் வெளியேறும் முடிவை எடுத்தார்.

லாஸ்லியா சாண்டி உள்பட பலர் கவினிடம் போட்டியில் இருந்து வெளியேற வேண்டாம் என்று வற்புறுத்திய போதிலும் நண்பர்களுக்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கவினுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பதற்காக நான்காவது சீஸனிலும் கவின், பிக் பாஸ் போட்டியாளர் ஆக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது உண்மையான தகவலா என்பது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதியில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்படும் போதுதான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

 

Related News