8 வருடங்களுக்கு பிறகு 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது.
எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை 'ஜிகர்தண்டா 2' படத்தில் நடித்த மலைவாழ் மக்களுடன் பார்த்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "ஜிகர்தண்டா 2 படத்தை அப்படத்தில் நடித்த தண்டிக்குடி மக்களுடன் திரையரங்கில் பார்த்தேன். அவர்கள் பெரிய திரையில் வருவதை பார்த்து மகிழ்ச்சியடைந்த பார்த்து மகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய கிளிக் செய்யவும்.