மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      கமலை கொள்ள திட்டமா!

  கமலை கொள்ள திட்டமா!

   
கமலை கொள்ள திட்டமா!

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் மற்றும் சங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2. இத்திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது நசரத்பேட்டை அருகிலுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட்டில் தான் இந்தியன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பொதுவாக 40-தில் இருந்து 60-வது அடிவரையிலான கிரேனை பயன் படுத்துவது வழக்கம். ஆனால் இப்படக்குழு 100 அடி கிரேனை பயன்படுத்தியுள்ளனர். 

சம்பவத்தை விளக்கிய கமல்:

படக்குழு தங்க கூடாரம் ஒன்று அமைக்கபட்டிருந்தது அதன் முன் நின்றுகொண்டிருந்த கமல், சங்கர் மற்றும் காஜல் ஆகியோர் மேல் நிழல் தெரிந்துள்ளது அதை பார்த்த உடனே இவர்கள் தப்பி ஓடிவிட்டனராம். பாவம் உள்ளே இருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மதுசூதனன் ஆகியோர் உயிரிழந்தனர்.

போலீஸ் விசாரணை மற்றும் விளக்கம்:

முதலில் விபத்து எப்படி ஏற்பட்டது என்று கண்டறிந்த காவல்துறை, விபத்தின் பின்னணி காரணம் என்னவென்று விளக்கியது. 100 அடி கிரேனின்  தளம் பலவீனமாக இருந்தால் கிரேனை தாங்கும் சக்தி இல்லாமல் விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த விபத்து கொலை முயற்சியோ அல்ல திட்டமிட்டு செய்த விபத்தோ இல்லை என்று போலீஸ் விளக்கியது. 

காயப்பட்டோருக்கு சிகிச்சை:

விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Related News