மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!

  மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!

   
மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!

தமிழகத்தில் கொரோனவின் கோரத்தாண்டவத்தை முன்னிட்டு  தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதிக மருத்துவ வசதி இல்லாத நம் இந்தியாவில் மருத்துவமனைகளும் மிக குறைவு தான், இதை அறிந்த நம் உலக நாயகன் கமல் மக்கள் நீதி மய்யதில் உள்ள மருத்துவர்களை கொண்டு தனது வீட்டை தற்காலிக மருத்துவ மையமாக்கி கொள்ள உத்தரவிட்டுள்ளார். கொரோனவை பார்த்து உலகமே அஞ்சி வரும் இந்நேரத்தில் கமல்ஹாசன் அவர்கள் துணிச்சலுடன் இப்படி செய்தது பாராட்டப்பட வேண்டிய செயல்.  

மேலும் பல திரையுலக பிரபலங்கள் பொது மக்களிடம் தங்களின் ரசிகர்கள் வாயிலாக பல உதவிகள் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல காணொளிகளையும் வெளியிட்டுள்ளார்கள்.

சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் விஷால் ஆகிய முன்னணி நடிகர்கள் மக்களுக்காக தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவி வருகின்றனர். 

காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் அரசாங்கம் அனைவரும் கூறுவது மக்களாகிய நம் நன்மைக்காக தான் பொது மக்கள் அதற்கு ஆதரவை நிச்சயம் தெரிவித்தால் அவசியம். வெளிநாடுளுள்ள மக்கள் ஆரம்ப காலகட்டத்தில் நம்மை போலதான் அலட்சியமாக இருந்தார்கள். இப்போது அலட்சியப்படுத்த அவர்கள் அங்கு உயிருடன் இல்லை. எனவே மக்களே அரசாங்கம் கூறுவதை பின்பற்றி நம் பாரத நாட்டை அதில் வசிக்கும் மக்களையும் காப்பாற்றுங்கள்.

 

 

Related News