பிக்பாஸ் 4-ரின் 100% உறுதியான போட்டியாளர்கள் !         பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் முதல் படம் !         பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் ஒன்றே போதும் கமல் முடிவு !

  பிக்பாஸ் ஒன்றே போதும் கமல் முடிவு !

   
பிக்பாஸ் ஒன்றே போதும் கமல் முடிவு !

கமல்ஹாசன் வரும் தேர்தலில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார் என்று எதிர்பார்த்தால் அவர் கட்சி வேலைகளையும் கவனிக்காமல், 'இந்தியன் 2' உள்பட திரைப்பட வேலையையும் கவனிக்காமல் முழுமூச்சாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஈடுபட்டுள்ளதற்கு காரணம் என்ன ?

வரும் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டன.

KAMAL

ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசனும், அந்த கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தேர்தல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் கமலஹாசனின் கட்சியின் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

KAMAL

இந்த நிலையில் திடீரென 'இந்தியன் 2' படம், 'தலைவன் இருக்கின்றான்' படம் உட்பட எந்த படத்தின் பணிகளையும் கவனிக்காமல் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனால் ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

INDIAN 2

இதற்கு காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு 150 கோடி வரை சம்பளம் கிடைக்க உள்ளதால் இனிவரும் மூன்று மாதங்களுக்கு அதில் மட்டும் தான் கவனம் செலுத்தினால் போதும் என்ற முடிவில் கமல் இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தான் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகளில் அவர் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

Related News