கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..

  லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..

   
லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..

தனுஷின் நடிப்பில் வெளிவர இருக்கும்  ஜகமே தந்திரம் படத்தின் கதையை பிரபல ஹாலிவுட் நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜகமே தந்திரம். மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் திரைப்படம் ஆகஸ்ட்  மாதம்  27 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்தது.

ரஜினி அவர்கள் நடித்த பேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படத்தை தனுஷை வைத்து இயக்கி உள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். கடா மீசை வைத்து சுருளி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

dhanush

மதுரை பேக்ட்ராப்பில் மீசை வைத்த கெட்டப், லண்டனில் கேங்ஸ்டர் லுக் இதனால் தனுஷ் சிங்கிள் ரோலில் நடிக்கிறாரா? இல்லை டபுள் ரோலில் நடிக்கிறாரா? என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

jagame thanthiram

இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்துள்ளார். படத்தில்
லண்டனில் மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கும் இவருக்கும் தனுஷுக்கும் இடையே தான் மோதல் என கூறப்படுகிறது.

jagame thanthiram

சமீபத்தில் TOIக்கு இவர் அளித்த பேட்டியில், ஜகமே தந்திரம் படத்தின் மையக்கருவை ஓப்பன் செய்துள்ளார். லண்டனில் இந்தியர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க பிரபல கேங்ஸ்டரான ஜேம்ஸ் காஸ்மோ, இந்தியாவில் லோக்கல் தாதாவாக வலம் வரும் நடிகர் தனுஷை வேலை அமர்த்துவதாகவும், ஆனால், அவருக்கே இவர் வில்லனாக எப்படி மாறுகிறார் என்பது தான் கதை என்பது தற்போது கசிந்து இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷின் மேஜிக் பல இடங்களில் இந்த படத்தில் ஒர்க்கவுட் ஆகி வேற லெவலில் வெற்றியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Related News