நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
Home     News      அட்லீயின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  அட்லீயின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

   
அட்லீயின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அட்லி தனது 36வது பிறந்தநாளை புதன்கிழமை அன்று கொண்டாடினார். சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்தன.  தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அட்லி. பின்னர், சாருக் கான் மற்றும் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த படத்தையும்  பகிர்ந்துள்ளார்.

அட்லீயின் பிறந்தநாளுக்கு விஜய்யும், ஷாருக்கானும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடனான படத்தைப் பகிர்ந்து, "என் பிறந்தநாளில் இன்னும் என்ன நான் கேட்க முடியும், என்னுடைய தூண்களுடன் சிறப்பான பிறந்தநாள்.

மை டியர் ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணா என்னோட தளபதி நடிகர் விஜய்” என்று குறிப்பிட்டிருந்தார். அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

விஜய், ஷாருக்கான் மற்றும் அட்லீ ஆகியோரின் சமீபத்திய படம், 'ஜவான்' படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது குறித்த செய்திக்கு வலு சேர்த்துள்ளது. இதற்கிடையில், வெள்ளித்திரையில் விஜய் மற்றும் ஷாருக்கானை ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related News