விஜய்யுடன் கூட்டணி அமைத்து 2வது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் லியோ.
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள்,அதுவேறு ஒன்றும் இல்லை வழக்கமான அனைவரும் பட பூஜை புகைப்படங்கள் வெளியிட இந்த குழு வீடியோவே வெளியிட்டார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவே வெளியாகி இருந்தது.
லியோ படத்தின் வியாபாரம்
படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவாகாத நிலையில் படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க நடந்துள்ளது.
டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ்- 120 கோடி ( தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்)
சாட்டிலைட் உரிமை சன் டிவி- ரூ.70 கோடி
ஆடியோ உரிமை- ரூ.18 கோடி
ஹிந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமை- ரூ.30 கோடி
ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமை- ரூ.50 கோடி
தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமை- ரூ.75 கோடி
கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் உரிமை- ரூ.35 கோடி
வட இந்தியா ரிலீஸ் உரிமை- ரூ.35 கோடி .