இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?

  பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?

   
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?

பிக்பாஸ் 4 தான் தொலைக்காட்சியில் இனி ராஜ்ஜியம் செய்யப்போகும் புதிய நிகழ்ச்சி. 100 நாட்கள் 13 பேர், இவர்கள் செய்யும் விஷயங்கள், கலாட்டாக்கள், சண்டைகள் என இதுதான் பேசப்பட இருக்கிறது.

நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் என்னவோ வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது, ஆனால் எப்போது நிகழ்ச்சி தொடங்கும் என்பது எல்லாம் தெரியவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்பந்தமான இரு போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று கசிந்துள்ளது. இதனால், நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்த முடியுமா? காலதாமதம் ஆகுமா? அல்லது வேறு போட்டியாளர்கள் கிடைப்பார்களா? என்ற கடும் அப்செட்டில் சில மாற்றங்களை செய்யவும் பிக் பாஸ் குழு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த சில நாட்களாக இவர்கள் தான் போட்டியாளர்கள் என்று ஒரு லிஸ்ட் பரவியது. இப்போது சில புதிய பெயர்களோடு ஒரு லிஸ்ட் பரவுகிறது.

இதோ அந்த லிஸ்ட் !

கேப்ரியளா
ரியா ராஜ்
அனு மோகன்
ஷிவானி
ஜித்தன் ரமேஷ்
ரம்யா பாண்டியன்
சனம் ஷெட்டி

இவர்களை தாண்டி நாசரின் மகன் அபியும் பிக்பாஸில் கலந்துகொள்ள இருக்கிறார் என செய்திகள் பரவுகின்றன. ஆனால் உண்மையில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும், இந்த முறை பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட புது விதிகளும் போடப்பட்டு இருக்கிறது.

அதன் படி " எந்தவொரு போட்டியாளரும் டபுள் பெட் பயன்படுத்தவும் தடை விதிக்கபட்டிருப்பதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக விலகல் உள்ளிட்ட ஏகப்பட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருக்கும் என தெரிகிறது ".

 

Related News