கமல்ஹாசன் ,காஜல் அகர்வால்,பிரியா பவானி சங்கர் ,சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்க ஆரம்பமான படம் இந்தியன்-2.படப்பிடிப்பில் நடந்த விபத்து ,இயக்குனர்-தயாரிப்பாளர் மோதல் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு நின்று போனது .இதனால் தயாரிப்பு நிறுவனம் சங்கர் மீது வழக்கு தொடர்ந்தது .இந்த வழக்கு முடிவடைந்த நிலையில் இப்போது இந்தியன்-2 மீண்டும் துவங்க உள்ளது.
காஜல் அகர்வால் இந்தியன்-2ல் நாயகியாக நடித்து வந்தார்.தற்பொழுது குழந்தை பிறந்த காரணத்தால் அவர் படத்தை விட்டு விலகி விட்டார்.இதனால் அவருக்கு பதிலாக தீபிகா படுகோனை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர் .