மாறன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு கதாநாயகியாக பிரியங்கா மோஹனை தேர்வு செய்தனர்.
தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு பிரியங்கவிற்கு ரசிகர் கூட்டம் பெருகியது. அதனால் பிரியங்காவிற்கு பட வாய்ப்புள் வந்து கொண்டே இருக்கிறது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை இவர் தவற விட்டார்.
தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க போகிறார். தெலுங்கில் உப்பெண்ணா, ஷாம் சிங்கராய் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கீர்த்தி 'தி வாரியர்' திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் இந்த படத்தின் 'come on baby lets go on the bullet' என்ற பாடல் வைரலாகி வருகிறது.
கீர்த்தி ஷெட்டி பிஸியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர். இவர் சூர்யாவின் 41 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பின்னர் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைய உள்ளார்.