நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
Home     News      பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு

  பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு

   
பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "கேப்டன் மில்லர்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்   பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன்,  ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 சில நாட்களுக்கு முன்பு, தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய தோற்றத்தில் இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டார். அவர் அதை "கேப்டன் மில்லர்" என்று குறிப்பிட்டார். அந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது கேப்டன் மில்லர் படத்தின் பூஜை  சென்னையில் நேற்று  நடந்தது. இதில் தனுஷ், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்காக கிராமத்து பாணியில் செட் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதற்கிடையில், தனுஷ் "நானே வருவேன் " மற்றும் "வாத்தி" படங்களில் நடித்து முடித்துள்ளார். 'நானே வருவேன் ' திரைப்படம் 29ஆம் தேதியும், வாத்தி டிசம்பர் 2ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News