Home     News      KGF 2 வீரக்கல் கிடைத்தது!!!

  KGF 2 வீரக்கல் கிடைத்தது!!!

   
KGF 2 வீரக்கல் கிடைத்தது!!!

Nandamuri Balakrishna(NBK) இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல் பணிகளிலும் ஆர்வமுடையவர். இவர் நடித்த படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்காதது இவரின் ரசிகர்களுக்கு பெரும் மனவருத்தமே, இவரின் நடிப்பில் வெளிவரும் சண்டைக்காட்சி ஆகட்டும் & காதல் காட்சி ஆகட்டும் இரண்டுமே கற்பனைக்கு எட்டாத ஒன்றே!!! சராசரி மனிதனால் எண்ணிப்பார்க்க முடியாத பல விசித்திர காட்சிகளை நமக்கு அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த நம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு போட்டியாக இருந்த NBK அவர்களின் புகழ் வெளிநாடுகளில் கூட மேலோங்கி இருக்க, தெலுங்கு சினிமாவில் வீர கல் பதித்த நம் தலைவர் NBK அவர்களுக்கு இன்று பிறந்த நாள் அதன் தொகுப்பாக இந்த விடியோவை கண்டு மகிழுங்கள் மக்களே!!!!


"அந்த வீரக்கல்ல இவரு பெயர் பதிக்கணும்னா ஏதோ பெருசா சாதிச்சுருக்கானு" 
சாதனைகள்:-

  • ரயில்வண்டியை ஒற்றைவிரலால் பின்னோக்கி அனுப்பியது.
  • மின்சாரத்தை அடக்கி ஆளும் வல்லமை கொண்டவர்.
  • முயல் குட்டியை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்தது 
  • ஒற்றை அடியாள் பலரை வீழ்த்துவது.
  • கண்ணில் நெருப்பு கக்குவது.
  • நடனத்தில் மற்றும் பாடல்களில் சாதனை செய்த மைகேல் ஜாக்சன் இவருக்கு இணையானவர் யாரும் இல்லை என்று கூறியிருப்பார் அவரின் ஆவி NBK உடம்பில் இருப்பதாக சில கருத்தும் வெளிவந்தது.

மேலும் இவரின் சாதனையை எண்ண முடியாது, இன்னும் இவரின் சாதனை தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
இவை அனைத்தும் இவரின் திரைப்படங்களின் மூலம் சித்தரிக்கப்பட்டவையே.

Related News