ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      அப்டேட் எதுவும் இல்லை, கைவிடப்பட்டதா அஜித்தின் வலிமை படம் புலம்பும் ரசிகர்கள்

  அப்டேட் எதுவும் இல்லை, கைவிடப்பட்டதா அஜித்தின் வலிமை படம் புலம்பும் ரசிகர்கள்

   
அப்டேட் எதுவும் இல்லை, கைவிடப்பட்டதா அஜித்தின் வலிமை படம் புலம்பும் ரசிகர்கள்

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்த நடிகர் அஜித், இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்துள்ள படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் லாக்டவுன் காரணமாக தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஆனால் படம் தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு ரசிகர்கள் அலுத்து போய்விட்டனர். அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரிடமும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் ரசிகர்களின் செயலால் தினறிய அஜித் தன்னுடைய ரசிகர்கள் என்று சிலர் பிரபலங்களிடம் அப்டேட் கேட்பது வருத்தமளிப்பதாக கூறினார். சரியான நேரத்தில் படக்குழு வெளியிடும் என்றும் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போது கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் அப்டேட் வெளியிடப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.

தயாரிப்பாளர் போனி கபூர் சில படங்கள் எடுத்து தோல்வி உற்றதால் இந்த படம் கைவிடப்படுமோ என்று ரசிகர்களிடையே ஒரு கேள்வி எழுந்துள்ளது . அனைவரும் படப்பிடிப்பை தொடங்கிய நிலையில் இவர்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
 

Related News