விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்

  "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்

   

'கீதா கோவிந்தம்', 'சர்காரு வாரி பாட்டா' படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் 'ஃபேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் 'சீதா ராமம்' படப்புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

இப்போது வெளியாகி உள்ள போஸ்டரில் விஜய் தேவர்கொண்டா லுங்கி அணிந்து, தோளில் சாக்குப்பையை மாட்டிக்கொண்டு, வாயில் ஆதார் அட்டையுடன் ஓடுவது போல இந்த போஸ்டர் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/cine-news/news/ கிளிக் செய்யவும்.

Related News