இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகிறது. மேலும், கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதைத்தொடர்ந்து படக்குழு இப்படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது.
அதன்படி, 'கங்குவா' படத்தில் பாபி தியோலின் 'உதிரன்' கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. பாபி தியோல் சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/cine-news/news/ கிளிக் செய்யவும்.