கடந்த ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை வெளியிட்டு ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளையடித்த இயக்குநர் தேசிங் பெரியசாமி. இவர் விரைவில் காதல் திருமணம் செய்ய உள்ளார்.என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.
இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் 2-வது ஹீரோயினாக நடித்த நிரஞ்சனியை திருமணம் செய்ய உள்ளாராம். இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார்.
இந்த படத்தில் கதாநாயகியின் தோழியாகவும், ரக்ஷ்னுக்கு ஜோடியாகவும் நடிகை நிரஞ்சனி நடித்திருப்பார்.
இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை படங்களில் நடிகர், நடிகை, இயக்குனர் என அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தற்போது இருக்கும் பல முன்னணி நடிகர்கள் எல்லாம் அந்த வகையில் வந்தவர்கள் தான்.இப்படி ஒரு நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரையே நடிகை நிரஞ்சனா திருமணம் செய்ய இருக்கிறாராம். படத்தின் போதே இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இது முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று நிரஞ்சனியின் இரண்டாம் சகோதரியான விஜயலக்ஷ்மி அறிவித்துள்ளார்.