தனுஷின் நானே வருவேன் புதிய போஸ்டர் வெளியீடு நடிகர் தனுஷின் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில் தனுஷுடன் இணைந்து இந்துஜா ரவிச்சந்திரன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.. இதில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் இந்தப் படத்தில் செல்வராகவனும் நடித்து வருகிறார். பல்வேறு இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து வரும் செல்வராகவன், தனது இயக்கத்தில் தானே நடிக்கும் முதல் படமாக ‘நானே வருவேன்’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.