ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனரான ருசோ சகோதரர்களின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தள வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட், பாலிவுட் என கலக்கிய நடிகர் தனுஷ் ஏற்கனவே பிரெஞ்சு படம் ஒன்றில் நடித்திருந்த நிலையில், தற்போது அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் பல மில்லியன் டாலர் மதிப்பில் உருவாகி வரும்..
தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட் நடிகர்களுடன் இந்த படத்தில் நடிகர் தனுஷும் இணைந்து நடித்து வருவது தென்னிந்திய சினிமா துறைக்கு வேற லெவல் பெருமை.
நெட்பிளிக்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பான தி கிரே மேன் படத்தின் புகைப்படங்கள், படப்பிடிப்பு தள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளவை உலகளவில் வைரலாகி வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள வாஸ்குஸ் பாறைகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
பெரிய இரண்டு டிரக்குகளையும் படப்பிடிப்பு தளத்தில் காண முடிகிறது. பாஸ்ட் அண்ட் பியூரியசில் வருவது போல் கொள்ளை சம்பவம் அல்லது மிகப்பெரிய சண்டை காட்சியை இந்த இடத்தில் படமாக்குவார்கள் என கருதப்படுகிறது. படு வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தி கிரே மேன் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.