யாரடி நீ மோகினி திரைப்படம் எடுத்த மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் "திருச்சிற்றம்பலம்" பிரியா பவானி ஷங்கர்,நித்யா மேனன்,பாரதிராஜா,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 18 அன்று வெளியாக உள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் தனுஷ் திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார் . சமீபத்தில் கூட தாய் கெழவி என்னும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை மிக பிரமாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியதில் தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28 அன்று நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார் ..