விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்து அதிக ரசிகர்கள் கொண்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் பங்குபெறும் புகழ், ஷிவாங்கி, பாலா, அஸ்வின் போன்ற பிரபலங்களால் இந்நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மேலும் இவர்களுக்கு பிக் பாஸ் போலவே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர்களில் ஒருவர் நிகழ்ச்சியில் இல்லை என்றாலும் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். தொடர்ந்து 2 வாரங்களாக குக் வித் கோமாளி 2 ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகவில்லை.
இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி. அதாவது கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பிய நிகழ்ச்சியை இந்த ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் ஷோவை மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்களாம்.
ஒளிபரப்பு நேரம் - ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியில் இருந்து 12. 30 மணி வரை ஒளிபரப்பாகும். இதை கேட்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.